விழிப்பு நகரம் (திண்டுக்கல்)
திண்டுக்கல் சித்தர்களும்,ஞானிகளும் வாழும் பூமி.
இந்த திண்டுக்கல்லில் ஞானிகளும் வணங்கும்பெருமை
பெற்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷி
1890ம் ஆண்டு தனது 11ம் வயதில் 1வருடம்
இங்குள்ள நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்
படித்தது திண்டுக்கல்லுக்கு பெருமை.
அந்த நாளில் மாலை வேளைகளில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி
பத்மகிரி மலையைச் சுற்றி ஆடிப்பாடி விளையாடி உள்ளார்.
திண்டுக்கல் கோவில் தெருவில் அவருடைய உறவினர் வீட்டில் வசிக்கும்
போதுஅடிக்கடி உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்.
ஊமைத்துரை சுரங்கப் பாதையில் நண்பர்களுடன் சென்ற அனுபவத்தை
பகவான் ஸ்ரீரமண மகரிஷி பின்னாளில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருக்கும்போது
திண்டுக்கல்லில் இருந்து வரும் அன்பர்களிடம் பகிர்ந்துகொள்வாராம்.
சிறந்த அறிவாளிகளில் ஒருவர்களாக அறியப்படுபவர்கள் யூதர்கள்.
ஏன்,எதற்கு,எப்படி?என்று கேள்விகளால் துளைக்கும் யூதர்களே
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் நான் யார்? தத்துவத்தில் மனம் அடங்கி
பகவானை கொண்டாடுகின்றனர்.
பகவான் அவதரித்த இடம்...
திருச்சுழி
பகவான் ஞானம் பெற்ற இடம்...
மதுரை
முக்தி அடைந்த இடம்...
திருவண்ணாமலை.
இந்த மூன்று இடங்களையும் உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்
வந்து தரிசித்து தங்கி செல்லும்படி ஆசிரமங்கள் உள்ளன.
பகவான் ஸ்ரீரமண மகரிஷி
வாழ்ந்து
படித்து
விளையாடிய
மலைக்கோட்டை கிரிவலப்பதையில்,
திண்டுக்கல்லிலும் உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்வந்து
தரிசித்து தங்கி செல்லும்படி ஒரு ஆசிரமம் அமைக்கும்
பணியை பகவான் அருளால் தொடங்கி உள்ளோம்.
1999 -ம் வருடம் தொடங்கி முக்கிய நாட்களில் ஸ்ரீரமண மகரிஷி அருளிய ஸ்ரீ அருணாச்சல அட்சரமணமாலை கூட்டுப்பாராயணம் நடைபெற்று வந்தது. அதன் பின்,
ஸ்ரீமத் ஓதசுவாமிகள் மடாலய அன்பர்களால் வியாழன் தோறும் ஸ்ரீ அருணாச்சல அட்சரமணமாலை கூட்டுப்பாராயணம் நடைபெற்று வருகிறது.
2003ம் வருடத்திலிருந்து தொடர்ந்து
பிரதி வாரம் ஞாயிற்று கிழமைதோறும் அன்பர்கள் இல்லத்திலும்
திருக்கோவில்களிலும் பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளியஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக தொடர்ந்து பகவான்அருளால்
நடந்து வருகிறது.
ஒவ்வொரு மாதமும் ஸ்ரீ பகவான் உதித்த பூனர்வசு நன்னாள் ஏழை எளியவர்களுக்கு
அன்னதானம் பகவான் ஸ்ரீரமண மகரிஷிஅருளால் வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும்நல்ல விசயங்களை போதிப்பதற்காகவும்
ஸ்லோகங்களை கற்றுக்கொடுக்கவும் ஸ்ரீரமணாச்சல குருகுலத்தை
பகவான்அருளால் நடத்தி வருகின்றோம்.
உலகமெங்கும் உள்ள பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்அடியார்களின்
அன்பும், ஒத்துழைப்பும் இருந்தால் மிகச்சிறப்பாய் திண்டுக்கல்
ஸ்ரீ ரமணாச்சல ஆஸ்ரமம் அமையும் என்பது திண்ணம்.
அருணாச்சலம் வாழி,
அன்பர்களும் வாழி
அட்சரமணமாலை வாழி.
Subscribe to:
Post Comments (Atom)


1 comment:
மிக அற்புதமான விஷயம் .
உலகின் ஆன்மிக ஊற்றான ஸ்ரீ ரமணரின் கல்வி பயின்ற அதே பள்ளியில் படித்த எனக்கு மிக சந்தோஷமான விஷயம் .மிக தாமதமாக இதை படிக்க நேர்ந்தது.
இன்னும் எழுதுங்கள் .வாழத்துக்கள்
Post a Comment